அமிலம் மூலம் மற்றும் உப்புக்கள்

அமிலம்

நீர்க்கரைசல் நிலையில் ஐதரசன் அயனை வெளிவிடும் பதார்த்தங்கள் அமிலங்கள் எனப்படும்.

ஐதரசன் அயனை வெளிவிடும் இயல்பின் அடிப்படையில் அமிலங்கள் இரண்டு வகைப்படும். 
  1. வன்னமிலங்கள்
  2. மென்னமிலங்கள்                                    
வன்னமிலங்கள்

நீர்க்கரைசல் நிலையில் முற்றாக அயனாக்கமடைந்து ஐதரசன் அயனைத் தோற்றுவிக்கும் அமிலங்கள் வன்னமிலங்கள் எனப்படும்.
       
        உதாரணம்,
        • ஐதரோக்குளோரிக்கமிலம்
        • நைத்திரிக்கமிலம்
        • சல்பூரிக்கமிலம்    
மென்னமிலங்கள்

நீர்க்கரைசல் நிலையில் பகுதியாக அயனாக்கமடைந்து ஐதரசன் அயனை தோற்றுவிக்கும் அமிலங்கள் மென்னமிலங்கள் எனப்படும். 

        உதாரணம்,

      • அசற்றிக்கமிலம்
      • பொசுபோரிக்கமிலம்
      • காபோனிக்கமிலம்
மேலதிக விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கு கீழேயுள்ள கானொளிகளைக் காணுங்கள்..














                    

Comments

Popular posts from this blog

மின்சாதனங்களின் வலுவும் சக்தியும்