Posts

Showing posts from July, 2020

அமிலம் மூலம் மற்றும் உப்புக்கள்

Image
அமிலம் நீர்க்கரைசல் நிலையில் ஐதரசன் அயனை வெளிவிடும் பதார்த்தங்கள் அமிலங்கள் எனப்படும். ஐதரசன் அயனை வெளிவிடும் இயல்பின் அடிப்படையில் அமிலங்கள் இரண்டு வகைப்படும்.  வன்னமிலங்கள் மென்னமிலங்கள்                                     வன்னமிலங்கள் நீர்க்கரைசல் நிலையில் முற்றாக அயனாக்கமடைந்து ஐதரசன் அயனைத் தோற்றுவிக்கும் அமிலங்கள் வன்னமிலங்கள் எனப்படும்.                   உதாரணம், ஐதரோக்குளோரிக்கமிலம் நைத்திரிக்கமிலம் சல்பூரிக்கமிலம்     மென்னமிலங்கள் நீர்க்கரைசல் நிலையில் பகுதியாக அயனாக்கமடைந்து ஐதரசன் அயனை தோற்றுவிக்கும் அமிலங்கள் மென்னமிலங்கள் எனப்படும்.           உதாரணம், அசற்றிக்கமிலம் பொசுபோரிக்கமிலம் காபோனிக்கமிலம் மேலதிக விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கு கீழேயுள்ள கானொளிகளைக் காணுங்கள்..                   ...

மின்சாதனங்களின் வலுவும் சக்தியும்

Image
👉 மின்சாதனங்களின் வலு                                               ஓரலகு நேரத்தில் செலவிடப்படும் மின்சக்தி அல்லது ஓரலகு நேரத்தில் செய்யப்பட்ட வேலை. ஒரு மூடிய மின்சுற்றினூடாகச் செல்லும் மின்னோட்டம் I ஆகவும் அம் மூடிய மின்சுற்றில் இணைக்கப்பட்டுள்ள மின்சாதனத்திற்கு தேவையான அழுத்தம் V ஆகவும் இருப்பின் அச் சாதனத்தின் வலுவானது(P) ,                                             P=V x I என்னும் சமன்பாட்டினால் தரப்படும். மேலதிக தவல்களை கீழேயுள்ள கானொளிகளை முழுமையாகப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.... மின்சாதனங்களினால் நுகரப்படும் மின்சக்தியின்(E) அளவினை அறிந்து கொள்வதற்கு, குறித்த மின்சாதனமொன்றின் வலுவினை(P) அது தொழிற்படும் நேரத்தினால்(t) பெருக்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.          ...